258. அருள்மிகு மாகாளேஸ்வரர் கோயில்
இறைவன் மாகாளேஸ்வரர்
இறைவி குயில்மொழி நாயகி
தீர்த்தம் மாகாள தீர்த்தம்
தல விருட்சம் புன்னை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் இரும்பை மாகாளம், தமிழ்நாடு
வழிகாட்டி திண்டிவனத்தில் பாண்டிச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இடதுபுறம் 'இரும்பை' என்ற பெயர்ப்பலகை பார்த்து திரும்பி சுமார் அரை கி.மீ. தொலைவு ஊருக்குள் செல்ல வேண்டும். பாண்டிச்சேரியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Irumbai Gopuramஊரின் பெயர் இரும்பை. கோயில் பெயர் மாகாளம். மாகாளர் வந்து வழிபட்டதால் இத்தலம் 'இரும்பை மாகாளம்' என்று வழங்கப்படுகிறது. மூலவர் 'மாகாளேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'மாகாளேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'குயில்மொழியம்மை', 'மதுசுந்தரநாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நடராஜர், பைரவர், சந்திரன், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். இங்கு நவக்கிரகங்கள் தங்கள் மனைவியர்களுடன் காட்சி தருகின்றனர். சந்திரன் தமது கையில் ஏடு ஒன்றை ஏந்தி கலா சந்திரனாகக் காட்சி அளிக்கின்றார்.

Irumbai Kaduveli Siddharஇத்தலத்தில் வாழ்ந்த கடுவெளி சித்தர் என்பவர், அரசனின் வேண்டுகோளின்படி மழை வர வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது இடையூறு நேரவே, அனைவரும் சித்தரை நடையாடினார். இதைக் கண்ட சித்தர் வருத்தமுற்று சிவபெருமானை வேண்ட, லிங்கம் மூன்றாக வெடித்தது. இதனால் பயந்த போன மன்னனும், மக்களும் சித்தரிடம் மன்னிப்புக் கேட்க, அவர் இறைவனை வேண்ட, மீண்டும் லிங்கம் ஒன்று சேர்ந்தது. கடுவெளி சித்தருக்கும் இறைவன் முக்தி அளித்தார். இதை விவரிக்கும் சிற்பங்கள் கோயிலில் உள்ளன.

மாகாளர், கடுவெளி சித்தர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com